காரில் வந்து சாமி சிலைகளை கடத்திய மர்ம கும்பல்


காரில் வந்து சாமி சிலைகளை கடத்திய மர்ம கும்பல்
x

பேரணாம்பட்டு அருகே காரில் வந்து சாமி சிலைகளை கடத்தி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே காரில் வந்து சாமி சிலைகளை கடத்தி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் சிலைகள் கடத்தல்

பேரணாம்பட்டு அருகே உள்ள மொரசப்பல்லி கிராமத்தை சேர்ந்தது நலங்காநல்லூர் கிராமம். வனப்பகுதியையொட்டி அதே கிராமத்தை சேர்ந்த சுனில் குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் பின்புறம் நாகாலம்மன் கோவில் நடுக்கல்லுடன் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் இந்த கோவிலில் கிராம மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

மேலும் இங்கு புதையல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலை சுமார் 3 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத உழவர் உழைப்பாளர் நலச்சங்க மாநில துணைப் பொது செயலாளர் என ஸ்டிக்கர் ஒட்டிய, ஆரஞ்சு நிறகொடி கட்டிய வெள்ளை நிற காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடப்பாரை, மண்வெட்டி கொண்டு நாகாலம்மன் கோவிலில் சுமார் 2 அடி பள்ளம் தோண்டி அங்கிருந்த 3 நாகாலம்மன் சிலைகளை காரில் கடத்தி உள்ளனர்.

போலீஸ் விசாரணை

இதனை பார்த்த ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் சென்று கேட்டபோது நிலத்தடி நீர் மட்டம் பார்க்க வந்ததாக கூறி உள்ளனர். ஆனால் கிராம மக்கள் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது மின்னல் வேகத்தில் காரில் தப்பி சென்றனர். இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் நலங்கா நல்லூர் கிராம மக்கள் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் காரில் சிலைகளை கடத்திய மர்ம கும்பல் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story