மலைவாழ் மாணவர்களுடன் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. இரவு தங்கி குறைகளை கேட்டறிந்தார்


மலைவாழ் மாணவர்களுடன் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. இரவு தங்கி குறைகளை கேட்டறிந்தார்
x

ஜவ்வாதுமலையில் மலைவாழ் மாணவர்களுடன் ஏ.நல்லதம்பி இரவு தங்கி குறைகளை கேட்டறிந்தார்.

திருப்பத்தூர்

ஜவ்வாதுமலையில் மலைவாழ் மாணவர்களுடன் ஏ.நல்லதம்பி இரவு தங்கி குறைகளை கேட்டறிந்தார்.

உண்டு உறைவிட பள்ளி

ஜவ்வாதுமலையில் புதூர்நாடு கீழூர் பகுதியில் மத்திய அரசின் மலைவாழ் மக்கள் மட்டும் தங்கி படிக்கும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300 மாணவர்கள் பள்ளியிலேயே தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நல்லதம்பி எம்.எல்.ஏ. நேற்று மாலை திடீரென்று ஜவ்வாதுமலை சென்று அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து கீழூர் பகுதியில் உள்ள மத்திய அரசின் உண்டு உறைவிட பள்ளிக்குச் சென்று மாணவ மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து இரவு முழுவதும் அங்கே மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு அங்கேயே தங்கினார்.

இன்று காலை மாணவ-மாணவிகளின் மன அழுத்தம், நினைவாற்றல் அதிகரித்து உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட வாழும் கலை அமைப்பினருடன் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

விளையாட்டு உபகரணங்கள்

பின்னர் நல்லதம்பி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் யோகா மேட், விளையாட்டு உபகரணங்கள், நோட்டு, புத்தகம், பேனா வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மலைவாழ் மக்களுக்காக உண்டு உறைவிட பள்ளி தமிழக அரசு அமைக்கப்பட்டு அந்த பள்ளியை ஏலகிரிமலைக்கு மாற்ற இருந்தார்கள்.

பெரும் முயற்சி எடுத்து சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்ததன் காரணமாக ஜவ்வாதுமலை புதூர் நாடு கீழுர் பகுதியில இடம் ஒதுக்கப்பட்டு பல கோடி செலவில் கட்டிடம் கட்டப்பட்டு இங்கு மலைவாழ் மக்கள் கல்வி கற்க முடிகிறது.

துணை மின்நிலையம்

இங்கு கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த 3 மாணவர்கள் திருச்சி என்.ஐ.டி.யில் மேல்படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது. ஜவ்வாதுமலையில் துணை மின் நிலையம் அமைக்கக்கோரி பலமுறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து 50 ஆண்டுகளில் முதல் முறையாக பேலூர் கிராமத்தில் ரூ.8.46 கோடி செலவில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.

மேலும் திருப்பத்தூரில் இருந்து புதூர் நாடுக்கு 15 கிலோமீட்டருக்கு 5½ அடிக்கு சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஜவ்வாது மலைக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக முதல்-அமைச்சர் ஏற்படுத்தி தர உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story