சங்கராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் தேவை கண்டறியும் முகாம்


சங்கராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் தேவை கண்டறியும் முகாம்
x
தினத்தந்தி 1 April 2023 10:00 AM IST (Updated: 1 April 2023 10:07 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் தேவை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் தேவை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதற்கு ஊரக உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் தீபா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் 3 சக்கர சைக்கிள், ஸ்கூட்டர் அடையாள அட்டை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகள் தொடர்பாக 260 மனுக்களை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் அளித்தனர். முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலா, வாசுகி, தனலட்சுமி, செல்வி, பாக்கியலட்சுமி, சங்கீதா, பத்மா மற்றும் மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story