கவர்னர் மாளிகை இடத்தில் புதிய சட்டசபை கட்டிடம்..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த துரைமுருகன்.!


கவர்னர் மாளிகை இடத்தில் புதிய சட்டசபை கட்டிடம்..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த துரைமுருகன்.!
x
தினத்தந்தி 20 April 2023 1:10 PM IST (Updated: 20 April 2023 1:34 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் மாளிகை அமைத்துள்ள இடத்தில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டலாம் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார்.

சென்னை,

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் வழக்கம் போல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை பேரவையில் வைத்தனர். அதற்கு தகுந்த பதிலை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பலர் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும் என கேட்டிருந்தனர். இதனை குறிப்பிட்டு, அமைச்சர் துரைமுருகன் சட்டபேரவையில் பேசினார்.

அதில், அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழகத்திற்கு புதிய சசட்டசபை கட்டிடம் அமைக்க வேண்டும் என பலர் கேட்டுள்ளீர்கள். அதனையே நானும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கையாக வைக்கிறேன் எனவும், அதுவும் இந்த சட்டப்பேரவை தொடரில் முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும், ,கவர்னர் மாளிகை இருக்கும் ராஜ்பவன் இடம், கிண்டி ரேஸ்கோர்ஸ் இடமும் தமிழக அரசுக்கு சொந்தமான இடம்தான் அதனை தமிழக அரசு எடுத்துக்கொண்டு அதில் புதிய சட்டப்பேரவை கட்டடத்தை கட்டலாம் என அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story