திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம்
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்துக்கு ரூ.3¼ கோடியில் புதிய கட்டிடம் அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டினார்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை திருக்கோவிலூர் செவலை ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் டி.என்.முருகன், துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா, தாசில்தார்கள் குமரன், கண்ணன், நகர தி.மு.க. செயலாளர் கோபிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் கீதா வரவேற்றார்.
விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கந்தன்பாபு, கோவிந்தராஜன், சம்பத், கலையரசிதங்கராஜ், புவனேஸ்வரிராஜா, ரவிக்குமார், ராகவன், மகாலிங்கம், துரைராஜன், சக்திவேல், மஞ்சுளாமுருகன், உஷாவெங்கடேசன், அண்ணாதுரை, சண்முகவள்ளிஜெகன்நாத், அருள், பிரகாஷ், பஷீரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.எஸ்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி பொறியாளர் பாரதி நன்றி கூறினார்.