ரூ.4¾ கோடியில் புதிய பஸ் நிலையம்
குறிஞ்சிப்பாடியில் ரூ.4¾ கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலாகுமார், துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, புதிய பஸ் நிலைய பணியை தொடங்கி வைத்தார்.
விழாவில் குறிஞ்சிப்பாடி கல்விக்குழு ஜெய்சங்கர், வார்டு உறுப்பினர்கள் விடுதலை சேகர், எஸ்.பி.கண்ணன், செந்தில்நாதன், அருள்முருகன், திலீபன், ராஜசேகரன், ராஜா, உதயசூரியன், ராஜ்குமார், வர்த்தக சங்கம் மாணிக்கம், தனுகோடி, அசோக் மற்றும் சோமு, முருகசாமி செல்வராஜ், வெற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேருராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.