ரஜினி மகள் வீட்டில் கொள்ளை - திடீர் திருப்பம்: 200 சவரன் கொள்ளை போனதாக புதிய புகார்...!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா விட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகை 60 சவரன் அல்ல, 200 சவரன் என ஐஸ்வர்யா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை போலீஸில் ஐஸ்வர்யா புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 100 சவரன் தங்க நகை, 30 கிராம் வைர நகை, ரூ.1 கோடி மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர்நவாலி சம்பந்தப்பட்டது தெரிய வந்தது. திருடப்பட்ட நகைகளை அவர் வாங்கியதாக தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 340 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவரையும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகளை போலீஸார் இன்று மீட்டுள்ளனர். ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 200 சவரன் நகைகள் கொள்ளை என புதிய புகார் ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ளார். ஏற்கனவே 143 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் புதிய புகாரை ஐஸ்வர்யா அளித்துள்ளார்.
எவ்வளவு நகைகள் திருட்டுபோனது என்பதை ஆய்வு செய்து தெரிவிக்க ஐஸ்வர்யாவிடம் போலீசார் கூறியிருந்தநிலையில் 200 சவரன் நகைகள் கொள்ளை போனதாக என புதிய புகார் ஒன்றை போலீசாரிடம் அளித்துள்ளார். முதலில் 60 சவரன் நகைகள் திருட்டு போனதாக ஐஸ்வர்யா புகார் தந்த நிலையில் 100 சவரன் நகைகள் மீட்கபட்டுள்ளனர்.
தனது வீட்டில் 200 சவரன் நகைகள் கொள்ளை போனதாக ஐஸ்வர்யாவின் புகாரில் தேனாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 143 சவரன் நகைகள் கைப்பற்ற நிலையில் தற்போது புதிய புகாரை ஐஸ்வர்யா அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.