உலக அரங்கில் தமிழர்களை உயர்த்தப் போகும் புதிய கல்விக் கொள்கை - தமிழிசை செளந்தரராஜன்
மிகப்பெரிய கல்விப்புரட்சியை ஏற்படுத்த உருவாக்கப்பட்டதே புதிய கல்விக்கொள்கை என புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு கல்வியை எடுத்துச்செல்ல பிரதமர் திட்டமிட்டு வருகிறார். மிகப்பெரிய கல்விப்புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் புதிய கல்விக்கொள்கை.
இதனை தமிழகம் போன்ற மாநிலங்கள் உடனடியாக பின்பற்றி, நடைமுறைப்படுத்தி மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பல மாநிலங்களில் புதிய கல்விக்கொள்கை நடைமுறையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் காலை உணவு திட்டம் இருக்கிறது. எனவே இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story