குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய எண்


குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய எண்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய செல்போன் எண்ணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிமுகம் செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய செல்போன் எண்ணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிமுகம் செய்தார்.

புதிய எண் அறிமுகம்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்தும், மாவட்ட காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றியும் தகவல் தெரிவிக்க புதிய தொலைபேசி எண் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தூயநெஞ்ச கல்லூரி வளாகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி புதிய எண்ணை அறிமுகப்படுத்தி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தகவல் தெரிவிக்கலாம்

9159959919 என்ற செல்போன் எண் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது முழுக்க முழுக்க எனது கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி தகவலை தெரிவிக்கலாம்.

மேலும் கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. அவர்கள் படிப்பை ஒன்றையே குறிக்கோளாக கொள்ள வேண்டும். போதை பழக்கத்திற்கு அடிமையானால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக திருப்பத்தூரை மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story