பள்ளிக்கூடத்தில் புதிய ஸ்மாா்ட் வகுப்பறை; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


பள்ளிக்கூடத்தில் புதிய ஸ்மாா்ட் வகுப்பறை; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய ஸ்மாா்ட் வகுப்பறையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை யூனியன் முன்னீர்ப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் புதிய ஸ்மார்ட் வகுப்பறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர். மனோகரன் புதிய ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். பின்னர் குன்னத்தூர் ஊராட்சியில் ரூ.9½ லட்சம் மதிப்பில் புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். மேலும் அங்குள்ள குப்பை, மேடாக காட்சியளிக்கும் ஓடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர்கள் அனுஷியா, உமா வெங்கடேஷ், கல்வி அதிகாரி முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் மனோகர், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, வட்டார தலைவர் கணேசன், நிர்வாகிகள் தனபால் கோயில்பிச்சை, நந்தகோபால், ஜெயசேகர், பிச்சுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story