கஞ்சா விற்ற நர்சிங் மாணவர் உள்பட 2 பேர் கைது


கஞ்சா விற்ற நர்சிங் மாணவர்   உள்பட 2 பேர் கைது
x

நாகர்ேகாவிலில் கஞ்சா விற்ற நர்சிங் மாணவர் உள்பட 2 ேபர் ைகது ெசய்யப்பட்டனர். இதுபற்றி ேபாலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கஞ்சா விற்ற நர்சிங் மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

வாகன சோதனை

நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் புத்தேரி ரெயில்வே பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் 150 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நர்சிங் மாணவர்

அ ைத ெதாடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்ேபாது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் நாகர்கோவில் கீழபுத்தேரி கீழ கலுங்கடியைச் சேர்ந்த ரெக்ஸ் பெரின் (வயது 21), மேலகலுங்கடி உடையடி தெருவைச் சேர்ந்த ஆல்பன் செல்வா (24) என்பதும், இவர்களில் ரெக்ஸ் பெரின் நர்சிங் படித்து வருவதும், ஆல்பன் செல்வா கேட்டரிங் படித்து முடித்தவர் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் 2 பேரும் நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story