கூரியர் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


கூரியர் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x

கூரியர் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருப்பூர்

திருப்பூர்

காங்கயத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 41). ஜவுளி வியாபாரி. இவர் திருப்பூரில் இருந்து கடந்த 6-4-2019 அன்று ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 690 மதிப்புள்ள 26 சேலைகளை ஆந்திர மாநிலம் தர்மாவரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு திருப்பூரில் உள்ள புரபசனல் கூரியர் நிறுவனம் மூலமாக பார்சல் அனுப்பினார். பார்சல் கட்டணமாக ரூ.1,204 செலுத்தினார். ஆனால் அந்த பார்சல் அங்கு சென்றுசேரவில்லை. பரமசிவத்துக்கும் திருப்பிக்கிடைக்கவில்லை.

இதுகுறித்து பரமசிவம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இரு தரப்பு விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில் பரமசிவத்துக்கு சேலைகளுக்கான ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 690-ஐ 9 சதவீத வட்டியுடன் சேர்த்தும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.1 லட்சம், வழக்கு செலவுத்தொகை ரூ.10 ஆயிரமும் கூரியர் நிறுவனம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.


Next Story