மடத்துக்குளம் அருகே மகளை தோளில் சுமந்து கொண்டு கோவிலுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது மனைவி கண் முன்னே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
மடத்துக்குளம் அருகே மகளை தோளில் சுமந்து கொண்டு கோவிலுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது மனைவி கண் முன்னே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
போடிப்பட்டி,
மடத்துக்குளம் அருகே மகளை தோளில் சுமந்து கொண்டு கோவிலுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது மனைவி கண் முன்னே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 46). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக மனைவி பவானி மற்றும் 5 வயது பெண் குழந்தையுடன் புறப்பட்டு சென்றார். சாமராயப்பட்டி வந்ததும் தனது மகளை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு சுமந்தார். குமரலிங்கம் செல்லும் சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக செல்லத்துரை மீது மோதியது.
இதில் செல்லத்துரை மற்றும் அவர் மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். செல்லத்துரையின் மகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.ஆனால் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்லத்துரையை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மனைவி கண் முன்சோகம்
இந்த சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய செல்வகுமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி கண் முன்னே கணவன் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.