வாகனம் மோதி வாலிபர் சாவு


வாகனம் மோதி வாலிபர் சாவு
x

வாகனம் மோதி வாலிபர் சாவு

திருப்பூர்

பொங்கலூர்

புதுக்கோட்டை மாவட்டம், வயலோகத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் ராஜசேகர் (வயது 24). இவர் பொங்கலூர் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள பேக்கரியின் எதிரே சாலை ஓரத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனம் மோதி அவர் இறந்ததாக ேபாலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

--


Next Story