பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி


பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி
x

பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே மனைவி கண் முன்னே பாறைக்குழியில் மூழ்கி வாலிபர் பலியானார். மீன் பிடிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர்

கரூர் மாவட்டம் ஆரியூர் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் குப்புசாமி (வயது 24). இவரது மனைவி மஞ்சுளா தேவி (25). இருவரும் நேற்று ஆரியூரில் இருந்து வெள்ளகோவிலுக்கு தேங்காய் களத்தில் வேலை கேட்பதற்காக மோட்டார்சைக்கிளில் வந்தார். பின்னர் வெள்ளகோவிலில் இருந்து திரும்பி நேற்று மதியம் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். இலுப்பைகிணறு பாறைக்குழி அருகே சென்றதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் தனது மனைவியை இறக்கிவிட்டு பாறை குழியில் மீன்பிடித்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது கால் தடுமாறி பாறைக் குழிக்குள் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

சாவு

இதை அறிந்த மனைவி மஞ்சுளாதேவி தனது கணவரை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டு உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது குப்புசமி நீரில் மூழ்கி விட்டார். உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறை மற்றும் போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்துவந்து நீரில் மூழ்கி இறந்த குப்புசாமி உடலை மீட்டனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். . இறந்து போன குப்புசாமிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story