கழிஞ்சூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்


கழிஞ்சூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்
x

கழிஞ்சூரில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் ஆங்காங்கே ஒருசில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று முன்தினம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவர் வசிக்கும் பகுதியில் சுகாதாரபணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story