அமராவதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் கதி என்ன?


அமராவதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் கதி என்ன?
x

அமராவதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் கதி என்ன?

திருப்பூர்

தாராபுரம்,

தாராபுரம் அமராவதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரின் கதி என்ன என்பது தெரியவில்லை.அவரை 2-வதுநாளாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கட்டிட தொழிலாளி

தாராபுரம் அடுத்துள்ள மூலனூரை சோ்ந்த சக்திவேல் என்பவரது மகன் தினேஷ்குமாா் (வயது24). கட்டிட தொழிலாளி. இவா் நேற்று முன்தினம் அவருடைய தம்பி கவின்குமாா், நண்பா் அமீா் ஆகியோருடன் தாராபுரம் நீரேற்றும் நிலையம் அருகில் உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணைக்கு சென்றுள்ளாா். பின்னா் தினேஷ்குமாரும், அமீரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனா். கவின்குமாா்

மட்டும் ஆற்றங்கரையில் அமா்ந்து வேடிக்கை பாா்த்துக்கொண்டு இருந்துள்ளாா்.

அப்போது தினேஷ்குமாரும், அமீரும் ஆற்றின் ஆழமான பகுதிக்குசென்று உள்ளனா். அமராவதி ஆற்றில் தண்ணீாின் வேகம் மிக அதிகமாக இருந்துள்ளது. இதனால் அவா்களால் தண்ணீாின் வேகத்திற்கு எதிராக நீந்தி கரைக்கு வரமுடியவில்லை. உடனே இருவரும் கரையில் இருந்த கவின்குமாரை பாா்த்து காப்பாற்றும்படி சத்தமிட்டனா்.

கண்டுபிடிக்க முடியவில்லை

உடனே கவின்குமாா் அருகில் இருந்த ஒருவாிடம் கயிறு ஒன்றை வாங்கி தண்ணீாில் வீசியுள்ளாா். அதனை பிடித்து அமீா் கரைக்குவந்து சோ்ந்துள்ளாா். ஆனால் தினேஷ்குமாா் தண்ணீாில் அடித்துசெல்லப்பட்டாா். அவரை காப்பாற்ற முடியாத கவின்குமாா் உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு போன் மூலம் தகவல் தொிவித்துள்ளாா்.

உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் நிலைய அலுவலா் ஜெயச்சந்திரன் தலைமையில் ஆற்றில் இறங்கி தேட ஆரம்பித்தனா். நேற்று 2-வது நாளாக மாலை வரை ஆற்றில் தேடியும் தினேஷ்குமாரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் அவரின் கதி என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து தாராபுரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.Next Story