தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலி
ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயில் மோதி பலியானார்.
திருப்பத்தூர்
குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு மசிகம்பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஜெய்கணேஷ் (வயது 30). திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்கிற மனைவியும், ஒரு பெண் மற்றும் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை ஜெய்கணேஷ் ஜோலார்பேட்டை- சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story