சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவர் கைது
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி
செம்பட்டு:
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலை சேர்ந்த வீரமுத்து(வயது 42) என்ற பயணி சலீம் என்ற போலியான பெயரில் பாஸ்போர்ட்டு பெற்றிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீரமுத்துவை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள், ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் வீரமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story