மது குடிக்க பணம் கொடுக்க மறுத்தவருக்கு கத்திக்குத்து


மது குடிக்க பணம் கொடுக்க மறுத்தவருக்கு கத்திக்குத்து
x

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் மேற்கு தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 50). இவர் தனது வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் வந்து கஞ்சா மற்றும் மது வாங்கி குடிக்க வேண்டி இருப்பதால் செலவுக்கு ரூ.100 வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு பார்த்தீபன் பணம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த சங்கரலிங்கம் கத்தியால் பார்த்தீபனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு வயிற்றில் ரத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக பார்த்தீபனை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பார்த்தீபன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story