20 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது


20 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
x

பேரளம் அருகே 20 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

நன்னிலம்:

பேரளம் போலீசார் மருதுவஞ்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை ெசயய்ப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த லலித்குமார் (வயது52) என்பதும், இவர் விற்பனை செய்ய புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லலித்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 கிலோ புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story