புகையிலை பொருட்களை விற்றவர் கைது


புகையிலை பொருட்களை விற்றவர் கைது
x

புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் டவுன் சப்- இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story