புகையிலை பொருட்கள் விற்க முயன்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே புகையிலை பொருட்கள் விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே புகையிலை பொருட்கள் விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ்பாபு தலைமையில் போலீசார் மார்த்தாண்டம் அருகே கல்லுதொட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட 14 பாக்கெட் புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, படந்தாலுமூடு பரமவிளையை சேர்ந்த சுரேஷ் (வயது 47) என்பதும், விற்பனைக்காக புகையிலை பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர்.


Next Story