5 மாதம் தலைமறைவாக இருந்தவர் கைது


5 மாதம் தலைமறைவாக இருந்தவர் கைது
x

நெல்லை அருகே 5 மாதம் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 28). இவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கடந்த 5 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

அவரை பிடிக்க நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்து பிடியாணையை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story