நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது


நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது
x

திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஆசாமியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் மங்களமேடு அடுத்துள்ள எறையூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story