மோட்டார் சைக்கிளில் பட்டாக்கத்தி வைத்திருந்தவர் கைது
மோட்டார் சைக்கிளில் பட்டாக்கத்தி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
அரவக்குறிச்சி அருகே ராஜபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32). இவர் சம்பவத்தன்று அரவக்குறிச்சி புங்கம்பாடி பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு தனது மோட்டார் சைக்கிளில் மது குடிக்க வந்துள்ளார். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளில் 1½ அடி நீள பட்டாக்கத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதம் வைத்திருந்ததாக ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story