ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.


ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
x

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஆஸ்பத்திரி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்ைக மனு கொடுத்துள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டி மற்றும் தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் ஊரில் உள்ள நிலங்களை முறைகேடாக பவர் எழுதி கொடுத்து, பின்பு ரத்து செய்து உள்ளனர். இதனால் எங்கள் நிலத்தின் வில்லங்க சான்று பெறும் போது, பவர் பெற்றவர்களின் பெயர்கள் இடம் பெறாமல், நிரந்தரமாக நீக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இலவச வீட்டுமனை பட்டா

கோவில்பட்டி குருமலை வி.பி.சிங் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நாங்கள் நீண்டகாலமாக குருமலையில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்து உள்ளது. குடிநீர் வசதி, சிமெண்ட் சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து உள்ளது. இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் நாங்கள் குடியிருக்கும் இடம் வனத்துறைக்கு பாத்தியப்பட்டது என்று கூறி இடைஞ்சல் செய்து வருகிறார்கள். ஆகையால் எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மேலத்தெருவை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மயானம் ஊருக்கு வடக்கு பகுதியில் அமைந்து உள்ளது. இதனை 200 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் சிலர் மயான இடத்தை ஆக்கிரமித்து தனியார் இடத்துக்கு சாலை அமைக்க முயற்சி செய்கிறார்கள். ஆகையால் தனியார் ஆக்கிரமிப்பை தடுத்து இந்து நாடார் உறவின் முறைக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளனர்.

டாக்டர் நியமனம்

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரி பிரசவத்துக்கு பெயர் பெற்ற ஆஸ்பத்திரி ஆகும். இங்கு ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது போதுமான டாக்டர்கள் இல்லாததால் பிரசவத்துக்கு வரும் கர்ப்பினி பெண்கள் நெல்லை, திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள் பணியாற்ற நடவடிக்கை வேண்டும். அதற்கு ஏற்ப கூடுதல் டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், உயர்தர தொழில்நுட்ப கருவிகள் கொண்டு சிகிச்சை அளிக்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story