அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x

விழுக்கம் ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியம் விழுக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்திய திட்டங்களான அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகர பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டம், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித்திட்டம், இருளர், பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை விழுக்கம் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.


Next Story