அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி


அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
x

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி மற்றும் அனைத்து துறைகளின் சார்பில் பணி விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சி நேற்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் செய்தி மற்றும் சுற்றுலாத் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வருவாய், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 21 துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து புகைப்படங்கள் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததை அமைச்சர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஒ.ஜோதி, அருணை கல்வி குழும துணைத்தலைவர் எ.வ.குமரன், மாநில தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாநில கைப்பந்து சங்கத் துணைத்தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story