ஆற்றில் குளிக்கச் சென்ற பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலி


ஆற்றில் குளிக்கச் சென்ற பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலி
x

செய்யாறில் ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறில் ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

பிளஸ்-2 மாணவர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பெரியத்தெருவை சேர்ந்த செல்வகுமார், கூலித்தொழிலாளி. இவரது மகன் சிவா (வயது 16). செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை வி்டப்பட்டதையொட்டி நேற்று மாலை ஆற்றில் நண்பர்களுடன் சிவா குளிக்க சென்றுள்ளார்.

அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் ஆற்றின் ஓரத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார்.

கரை ஒதுங்கியது

இதை பார்த்த நண்பர்கள் உடனடியாக செய்யாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்ேபரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் சிவாவை தேடினர். இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை சிவாவின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து செய்யாறு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story