விஷம் குடித்த கட்டிட தொழிலாளி சாவு
கோவில்பட்டியில் விஷம் குடித்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள இலுப்பையூரணி தாமஸ் நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது65). கட்டிட தொழிலாளியான இவர் வீட்டிற்கு சரியாக பணத்தை கொடுக்காமல் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும், மனைவி மாரியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த 12-ந் தேதி ஜேம்ஸ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாராம். இதை அவரது மனைவி கண்டித்தாராம்.
இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். நிலையில் வீட்டில் இருந்தாராம்.
இதைப்பார்த்து பதறிப்போன குடும்பத்தினர், அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.