நகைப்பட்டறைக்குள் புகுந்த விஷப்பாம்பு
சாத்தான்குளத்தில் நகைப்பட்டறைக்குள் புகுந்த விஷப்பாம்பு பிடிபட்டது.
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பஜார் பகுதியில் அழகு லிங்கம் (வயது 35) என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கழிவு நீர் ஓடை வழியாக வந்த விஷப்பாம்பு ஒன்று பட்டறைக்குள் புகுந்தது. இதை பார்த்த அழகுலிங்கம் மற்றும் ஊழியர்கள் அலறிஅடித்து வெளியே ஓடினர். இதுகுறித்த தகவலின் பேரில் சாத்தான்குளம் தீயனைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கடைக்குள் இருந்த அந்த பாம்பை லாவகமாக பிடித்து வெளியே கொண்டு வந்தனர். மூன்று அடி நீளமிருந்த அந்த பாம்பு கொம்பேறி மூக்கன் வகையைச் சேர்ந்தது என தெரிந்தது. பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக விட்டனர்.
Related Tags :
Next Story