பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு


பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
x

பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்

மதுரை


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் உள்ள 4 மாசி வீதிகளிலும் பொது மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் மதுரை திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பெருமாள் (வயது52) என்பவர் மேலமாசி வீதி அருகே உள்ள மதனகோபால சாமி கோவில் அருகே நேற்று பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரெனமயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


Related Tags :
Next Story