சாலையில் ஏற்பட்ட பள்ளம்


சாலையில் ஏற்பட்ட பள்ளம்
x

மயிலாடுதுறையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தநிலையில், மயிலாடுதுறை ஐயாறப்பர் மேலவீதி, தெற்கு வீதி சந்திப்பில் பாதாள சாக்கடை கழிவுநீரேற்று நிலையம் அருகில் நேற்று மாலை சாலையில் மிகப்பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. அப்போது சாலையில் ஆள் நடமாட்டமில்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று தடுப்புகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததோடு, பள்ளத்தை மண் கொண்டு நிரப்பி தற்காலிகமாக சரி செய்தனர். பாதாள சாக்கடையில் ஏற்படும் உடைப்பால் சாலையில் இதுபோன்று பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






Next Story