தனியார் பள்ளி பஸ் விபத்தில் சிக்கியது
தனியார் பள்ளி பஸ் விபத்தில் சிக்கி உள்ளது.
கரூர்
கரூர் மாவட்டம், மாயனூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர். இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, வீரராக்கியம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் வேகமாக வந்துள்ளது. அந்த வாகனம் தனியார் பள்ளி பஸ்சின் மீது மோதியது. இதில் பள்ளி பஸ்சில் இருந்த மாணவர்கள் சிலா் காயமடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சில தனியார் நிறுவன வாகனங்கள் இந்த சாலை வழியாக அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Related Tags :
Next Story