நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்


நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்
x

நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தின் சார்பில் உலக நாட்டுப்புற தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நேற்று ஊர்வலம் நடந்தது. தஞ்சை ஈஸ்வரிநகரில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில்150-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தை நீலகிரி ஊராட்சி தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். மூத்த தெருகூத்து கலைஞர் புரசை சுப்பிரமணிய தம்பிரான் முன்னிலை வகித்தார்.இதில் தென்னகப்பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஆலோசகர் நிர்வாக பிரிவு கிருஷ்ணமூர்த்தி, நிகழ்ச்சி அலுவலர் உமாசங்கர் மற்றும் தென்னகப்பண்பாட்டு மைய அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தஞ்சை ஈஸ்வரி நகரில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் தென்னகப்பண்பாட்டு மையத்தில் சென்றடைந்தது. பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் தென்னகப்பண்பாட்டு மைய அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.


Next Story