எண்ணும், எழுத்தும் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும் நிகழ்ச்சி


எண்ணும், எழுத்தும் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும் நிகழ்ச்சி
x

எண்ணும், எழுத்தும் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வட்டார வள மையத்தில் 142 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கையேடு மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா தலைமை தாங்கி பேசுகையில், கடந்த ஆண்டு எண்ணும், எழுத்தும் திட்டத்தில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டு உழைத்ததன் பயனாக மே மாதம் 25-ந் தேதி புதுக்கோட்டையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் பாராட்டு தெரிவித்த நிகழ்ச்சி நாம் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக மாவட்டத்தில் உள்ள 1,432 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் எண்ணும், எழுத்தும் சம்பந்தமான கையேடு மற்றும் பயிற்சி புத்தகம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டும் எண்ணும், எழுத்தும் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாணவர்களுக்கு சிறப்பாக வழிகாட்ட வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி, புதுக்கோட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் டயானா, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story