புதிய தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


புதிய தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x

ஆம்பூர் அருகே புதிய தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் காளிகாபுரம் பகுதியில் புதிய தார் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக சென்ற லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story