சேலம் ஆவின் பால் பண்ணை முன்பு காத்திருப்பு போராட்டம்


சேலம் ஆவின் பால் பண்ணை முன்பு காத்திருப்பு போராட்டம்
x

சேலம் ஆவின் பால் பண்ணை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ஆவின் பால் பண்ணை கட்டுவதற்காக 1979-ம் ஆண்டு தளவாய்பட்டி, சித்தனூர் ரொட்டிக்காரன் வட்டம், பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த 44 குடும்பத்தினர் 50 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்கினர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அருகிலேயே நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலம் வழங்கப்பட்டு 43 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை கிரயம், பட்டா பத்திரம் செய்து கொடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று ஆவின் பால் பண்ணை முன்பு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்கத்தினர் ஒருங்கிணைப்பாளர் சிவராமன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆவின் பொதுமேலாளர் சத்ய நாராயணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போராட்டம் இரவும் நீடித்தது.


Next Story