கவர்னருக்கு சாம்பல் அனுப்பும் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் கவர்னருக்கு சாம்பல் அனுப்பும் போராட்டம்
கள்ளக்குறிச்சி
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க அனுமதி கொடுக்க மறுத்துவரும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பலை கவர்னருக்கு அனுப்பும் வகையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார்.
இதில் கவர்னரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கவர்னருக்கு அனுப்புவதற்காக ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பல் போன்ற பொருளை பையில் எடுத்துக்கொண்டு தபால் நிலையத்துக்குள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மாவட்ட செயலாளர் பிரபு உள்பட 9 பேரை கைது செய்தனர்.