கருகும் நெற்பயிருக்கு தண்ணீர் கேட்டு பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
கருகும் நெற்பயிருக்கு தண்ணீர் கேட்டு பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
கருகும் நெற்பயிருக்கு தண்ணீர் கேட்டு பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகையில் நடந்தது. இதையொட்டி நாகை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மல்லிகை பூவிற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவு பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பயிர்க்காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். உளுந்து பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் பயிர்களை பாதுகாக்க காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பிரதமர் அலுவலகத்துக்கு கோரிக்கைகள் எழுதப்பட்ட ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.