மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சி.வி.சண்முகம் எம்.பி. பங்கேற்றனா்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி துணை தலைவருமான என்.ஜி.சக்திவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் ஆர்.பசுபதி, வண்டிமேடு ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் சிட்கோ சீனு, ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜூனன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், சுரேஷ்பாபு, பேட்டை முருகன், எசாலம் பன்னீர், ராஜா, வளவனூர் நகர செயலாளர் முருகவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், முன்னாள் அரசு வக்கீல் தமிழரசன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், முன்னாள் நகர செயலாளர் மந்தகரை ஜானகிராமன், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் பாஸ்கரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, நகர இளைஞரணி செயலாளர் குமரன், நகர மன்ற உறுப்பினர்கள் கோல்டு சேகர், கோதண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மாணவரணி செயலாளர் அன்பரசன் நன்றி கூறினார்.