ஜெயங்கொண்டத்தில் இன்று மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ஜெயங்கொண்டத்தில் இன்று மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அரியலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஜெயங்கொண்டம் ஆபத்து காத்த விநாயகர் கோவில் அருகில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சாதனைகளை விளக்கி பேசுகிறார்கள் என்று மாவட்ட தலைவர் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story