தென்னந்தோப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு


தென்னந்தோப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு
x

நத்தம் அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

திண்டுக்கல்

நத்தம் அருகே குட்டுப்பட்டி புதூரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அப்பகுதியில் உள்ளது. நேற்று காலை இவர், தனது தோப்புக்கு சென்றார். அப்போது, மலைப்பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வெள்ளைச்சாமி, இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர். அது, 7 அடி நீளம் இருந்தது. பிடிபட்ட பாம்பை, வனத்துறையினரிடம் தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த பாம்பை, கரந்தமலை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.


Next Story