தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு
வத்தலக்குண்டு அருேக தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
திண்டுக்கல்
வத்தலக்குண்டு அருகே ராமநாயக்கன்பட்டி கிராமத்தில் வைகை ஆற்று பாலத்தை ஒட்டிய பகுதியில் தனியார் தோட்டத்துக்குள் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே நிலைய அலுவலர் ஜோசப், போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ராமநாயக்கன்பட்டிக்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தோட்டத்தில் புதருக்குள் பதுங்கி இருந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story