கோழி கூட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
கோழி கூட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
கன்னியாகுமரி
அருமனை:
அருமனை அருகே உள்ள காரோடு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கூட்டில் அடைக்கப்பட்டிருந்த கோழிகள் அலறியபடி இருந்தது. இதையடுத்து நேற்று காலையில் பிரின்சின் குடும்பத்தினர் கோழிகளை திறந்து விட சென்றபோது ஒரு மலைப்பாம்பு கூட்டுக்குள் பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாம்பு ஒரு கோழியை கொன்று விட்டு விழுங்க முயற்சி செய்து கொண்டிருந்தது. இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வனச்சரக அலுவலர் முகைதீன் உத்தரவின் பேரில் வனவர் கணேஷ் மகாராஜன், வேட்டை தடுப்பு பிரிவு சஜி, கணேஷ் ஆகியோர் வந்து மலைப்பாம்ைப பிடித்தனர். அந்த பாம்பு சுமார் 6 அடி நீளம் இருந்தது. தொடர்ந்து அதை தொடலிக்காடு வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story