கால்வாயில் மலைப்பாம்பு பிடிபட்டது


கால்வாயில் மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே கால்வாயில் மலைப்பாம்பு பிடிபட்டது

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே கால்வாயில் மலைப்பாம்பு பிடிபட்டது.

தக்கலை அருகே உள்ள கீழ சித்திரங்கோடை அடுத்த அடையாமடை பகுதியில் திருவிதாங்கோடு கிளை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பூவங்காபரம்பு பகுதியில் நேற்று காலை 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தண்ணீரில் நீந்தியபடி வந்தது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து 2 மணி நேர போராடி பாம்பை பிடித்தனர். பின்னர் அதை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story