குன்னூர் அருகே வீட்டில் பூத்த அரிய நிஷாகந்தி மலர்-புகைப்படம் எடுத்த பொதுமக்கள்


குன்னூர் அருகே வீட்டில் பூத்த அரிய நிஷாகந்தி மலர்-புகைப்படம் எடுத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே வீட்டில் பூத்த அரிய நிஷாகந்தி மலர்- புகைப்படம் எடுத்த பொதுமக்கள்

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரிய வகை செடி, கொடிகள், தாவர வகைகள் மற்றும் மரங்கள் அதிகமாக உள்ளன. சீசன் காலங்களில் அந்த செடிகள், மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஜெகரண்டா, பிளேம் ஆப் பாரஸ்ட், சேவல் கொண்டை மலர்கள், பொகைன் வில்லா, காட்டு டேலியா, காட்டு சூரிய காந்தி மலர்கள் பூத்து குலுங்கி வருவது காண்போரின் மனதைக் கவர்ந்து வருகிறது. இந்தநிலையில் குன்னூர் அருகே உள்ள பேரட்டி கிராமத்தை சேர்ந்த கங்கா என்பவரது வீட்டில் இதமான சீதோஷ்ண நிலையில் வளரக் கூடிய ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் இரவு நேரத்தில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ இரவில் பூத்துள்ளது. இந்த பூவை நிஷகாந்தி என்றும் அழைப்பார்கள். இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடியாகும். இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். கங்கா என்பவரது வீட்டில் வைத்துள்ள பிரம்ம கமலம் செடியில் நள்ளிரவில் பூத்த மலர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.


Next Story