ரேஷன் கடை அமைக்க வேண்டும்


ரேஷன் கடை அமைக்க வேண்டும்
x

ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தென் வன்னியர் வீதியில் பாண்டியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் ஸ்ரீராம்நகர், தென் வன்னியர் வீதி, பஸ் நிலையம், அரக்கோணம் ரோடு, வாலாஜா ரோடு, பாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1,725 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குகின்றனர். பண்டிகை காலங்களில் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க வருவதால் கூட்டம் அதிகம் இருக்கும். ரேஷன் பொருட்கள் வாங்குவது தாமதம் ஏற்படும். எனவே வழங்கல் துறை அதிகாரிகள் ஸ்ரீராம்நகர் பகுதியில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story