10 ஆண்டுகளுக்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரேஷன் கடை


10 ஆண்டுகளுக்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரேஷன் கடை
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே புதிதாக கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே புதிதாக கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாடகை கட்டிடம்

கூத்தாநல்லூர் அருகே பழையனூரில் உள்ள சாத்தனூரில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் இருந்தது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள வாடகை கட்டிடத்தில் அரிசி, சீனி, கோதுமை, பருப்பு, மண்எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை புதிய கட்டிடத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் பயன்பாட்டிற்கு விடாமல் உள்ளதால், சேதமடைந்த கட்டிடம் போல காட்சி அளிக்கிறது.

புதிய ரேஷன் கடை

மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடும் இடமாகவும் மாறி வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் இன்னமும் பயன்பாட்டிற்கு விடாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது.

மேலும் இன்னமும் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருவது ஏனென்று தெரியாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு செலவில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story